Monday, August 10, 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக கருதுகின்றேன்: இரா.சம்பந்தன்

நேற்று (07) இரவு காரைதீவில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரிக்கும் தேர்தல் பிரச்சார கூட்டமொன்றில் கலந்து கொண்டு  தமிழ் தேசிய கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உரையாற்றுகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒரு ஜனநாயகவாதியாக நான் கருதுகின்றேன். அவரது செயற்பாடுகளும் அவ்வாறாகவே அமைந்துள்ளது. அவர் நமது நாட்டில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்து வருவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால மகாத்மா காந்தி, மார்டின் ஜோசப்கிங், நெல்சன் மண்டேலா போன்ற தலைவர்களை பின்பற்ற விரும்புவதாக கூறுகின்றார்.
இந்த தலைவர்கள் தங்களது நாட்டின் மக்களின் சுதந்திரத்திற்காக சம உரிமைக்காக போராடியவர்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால ஒரு முறை மாத்திரமே ஜனாதிபதியாக இருப்பேன் என கூறுவதுடன், தனக்கு பதவி ஆசை இல்லை என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றார். அதற்குள் நாட்டில் உள்ள பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், கருமங்கள் நடைபெறும் வரையில் நாம் அவதானமாக செயற்படவேண்டும். எவரையும் எளிதில் நம்ப முடியாவிட்டாலும் மாற்றங்களை நாம் அதானிக்காமல் இருக்க முடியாது என்றார்.
ஜனாபதிபதியின் தேர்தலில் முன்பும் பின்பும் மைத்திரிபால சிறிசேனவுடன் எமது கட்சி பேசி வருகின்றது. தமிழ் மக்களுக்குரிய சரியான அரசியல் தீர்வு எட்டப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகின்றது என்றார்

No comments:

Post a Comment

இது பற்றி உங்கள் கருத்தை இங்கே எழுதவும் ....!