Saturday, August 08, 2015

நம் சமூகம் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி அடைந்த சமூகமாகத் திகழ நடவடிக்கைஎடுக்க வேண்டும்.வேட்பாளர்- சி.ஜெகநாதன் (சட்டத்தரணி)

ஓர் சமூகம் கல்வி, கலை, கலாசாரம்,மருத்துவம், பொருளாதார ரீதியில் சிறப்புபெற்றால்தான் உண்மையான அபிருத்திஅடைந்த சமூகமாக மிளிர முடியும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்சிந்தாத்துரை ஜெகநாதன் விநாயகபுரத்தில்நடைபெற்ற கருத்தரங்கில் குறிப்பிட்டார்.மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் எமதுமக்கள் மூன்று தசாப்தகாலமாக நாட்டில்நடைபெற்ற உரிமைப் போராட்டத்தில்கல்வி,கலாசார, பொருளாதார, மருத்துவரீதியில் எதிர்பார்க்கப்பட்ட தன்னிறைவுகாணமுடியாத துக்ககரமான சம்பவங்கள்நடந்தேறியுள்ளது. கடந்த முப்பது வருடகாலங்களில் எம்மக்கள் சொல்லொன்னாதுன்பங்களை அனுபவித்து வந்தனர்.

எது எவ்வாறாயினும் பிற காரணிகளால்பாதிப்புக்குள்ளாக்கப்பட முடியாத (சூறாவளி,வெள்ளம், நெருப்பு, சுனாமி) போன்றஇயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்படமுடியாத ஓர் செல்வம் கல்விச் செல்வமாகும்.இச் செல்வமானது கடின உழைப்பிற்கும்,கண்விளிப்பிற்கும் மத்தியில் தான்கருத்தரிக்கின்றது. எனவே கல்வியியல்செயற்பாடுகளால்தான் எம் சமூகத்தைமென்மேலும் முன்னேற்றப் பாதைக்குகொண்டு செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று எம்மக்கள் சட்டரீதியாக பலசிக்கல்களை எதிர் நோக்குகின்றார்கள்.உதாரணமாக பிறப்பு, இறப்பு பதிவுகள்,காணாமல் போனோரின் பொலிஸ்முறைப்பாடுகள், காணி அனுமதிப்பத்திரம்,காணி உறுதி போன்றவற்றைப் பெறுவதில் பலசிக்கல்களுக்கு முகங் கொடுக்கின்றனர்.உதாரணமாக பொத்துவில், ஊரணி போன்றஇடங்களில் தனியார் காணிகள் ஆட்சிஉறுதியின் மூலம் அபகரிப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன. தாண்டியடி, மணல்சேனைப் பகுதியில் முப்பது வருடங்களுக்குaமேலாக ஆண்டு அனுபவித்து வந்த வளவைசிலர் போலி ஆவணங்களை தயாரித்துஉண்மையான காணிச்சொந்தக்காரர்களைஎதுவித நட்ட ஈடும் செலுத்தாமல்வெளியேற்றியுள்ளனர்.


இது சம்பந்தமாக தொடர்புடையபெண்மணியை நேரில்சந்தித்து பெற்றுக்கொண்ட நேர்காணலின் போது பெறப்பட்டவிடயங்களை தனியாகக்கோவைப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார். அது சம்பந்தமானசட்டரீதியான நடவடிக்கை விரைவில்ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும்குறிப்பிட்டுள்ளார்.