Friday, August 14, 2015

தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள். 700 பேர் கைது - பொலிஸ் முறைப்பாட்டு பிரிவு தகவல்



தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள் தொடர்பில் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள முறைப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

வியாழக்கிழமை நன்பகல் வரை கிடைக்கப்பெற்ற 242 முறைப்பாடுகளுக்கமைய 542 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் தேர்தல் சட்டமீறல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற 234 முறைப்பாடுகளக்கமைய மேலும் 135 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் சட்ட மீறல்கள் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பு மற்றும் முறைப்பாடுகளக்கமைய இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டு.



இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
இதேவேளைஇ தேர்தலுடன் தொடர்புடைய சட்டமீறல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல் செயலகம் இதுவரை 1407 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது

சட்ட விரோதமான முறையில் பொருட்கள் விநியோகித்தல் தொடர்பில் 195 முறைப்பாடுகளும்இ பதாகைகள் மற்றும் கட்அவுட்களை ஒட்டுதல் தொடர்பில் 236 முறைப்பாடுகளும்இ அரச சொத்துக்களை பயன்படுத்துதல் தொடர்பில் 185 முறைப்பாடுகளும்இ மற்றும் அரச ஊழியர்களை தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுத்துதல் தொடர்பில் 152 முறைப்பாடுகளும். பதவி உயர்வுகள் வழங்கல் தொடர்பில் 205 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.