Tuesday, August 11, 2015

ஓய்வூதிய முரண்பாடு முடிவுக்கு வந்துள்ளது :ரூ.2,500 தொடக்கம் ரூ.10,000 வரை ஓய்வூதிய உயர்வு

சுமார் ஒரு தசாப்த காலமாக நிலவி வந்த ஓய்வூதிய முரண்பாடு நேற்று (10) முதல் நீக்கப்படுவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சுனில் எஸ்.ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

அதற்கமைவாக 2006ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வூபெற்ற அரசாங்க உத்தியோகத்தர்கள் சுமார் 337,000 பேருக்கு ரூ.2,500 தொடக்கம் ரூ.10,000 வரை ஓய்வூதியம் அதிகரிக்கப்படும்.

இதில் விஷேடம் என்ன வெனில் நாளை (10) வழங்கப்படவுள்ள ஓய்வூதியம் தொடக்கம் கிடைக்கவுள்ள ஓய்வூதியத்துடன் இவ்வதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது என ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். அதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் திறைசேரியிலிருந்து 1,500 மில்லியன் ரூபா விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஓய்வூதியக்காரர்கள் சுமார் ஒரு தசாப்த காலமாக 6/2006 சுற்றிக்கையினை நடைமுறைப்படுத்தி ஓய்வூதியத்தினை திருத்தும் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி வந்த போதிலும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படாமலேயே இருந்து வந்ததாக சுட்டிக் காட்டிய ஹெட்டியாராச்சி அவர்கள் திணைக்களத்தின் புதிய கணணி வயைமைப்பின் மூலம் முறையான இந்த ஓய்வூதிய திருத்தத்திற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

எவ்வாறெனினுமி இது தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுமிடத்து திணைக்களத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பணிப்பாளர் நாயகம ஓய்வூதியம்; பெறுவோரைக் கேட்டுக்கொண்டார்.

அதேபோன்று ஒரு மாதத்திற்கான நிலுவை ஓய்வூதியமும் இம் மாத ஓய்வூதியத்துடன் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்