Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

தம்பிலுவில் - 2 இல் ஆயுதங்கள் சில திருக்கோவில் பொலிசாரால் மீட்பு..

                                          (திருக்கோவில். சு.கார்த்திகேசு) திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-2 மேற்க...

                                          (திருக்கோவில்.சு.கார்த்திகேசு)

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில்-2 மேற்கு கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள தம்பிலுவில் கலைமகள் பாடசாலைக்கு முன்பாகவுள்ள பிரதான வீதியில் மிக நீண்ட காலமாக குடியிருப்பாளர் இல்லாத வீடு ஒன்றின் இருந்து ஒரு தொகுதி ஆயுதங்கள் இன்று (02ஞாயிறு) மாலை 5.00 அளவில் திருக்கோவில் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.இவ் ஆயுதங்களை வீட்டின் காணியினுள் நீர்க்குழாய் ஒன்றினை பொருத்துவதற்காக கிடங்கினை வெட்டிய போது சந்தேகத்துக்குகிடமான முறையில் உரவேக் ஒன்றினை கண்டிருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் அங்கு சென்ற பொலிசார் நிலத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் மேற்படி ஆயுதங்களை பொலிசார் மீட்கப்படுள்ளதாக திருக்கோவில் பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மீட்கப்பட்ட ஆயுதங்களாக டி56 ரக துப்பாக்கி இரண்டு,கிரினேட் லோஞ்சர் ஒன்று,துப்பாக்கி ரவைகள் அறுபது மற்றும் துப்பாக்கி ரவைக் கூடுகள் இரண்டு என்பன இவ்வாறு  மீட்கப்பட்டுள்ளதாகவும் இது சம்மந்தமான விசாரனைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் திருக்கோவில் பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகார் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.