Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

விவசாயிகள் விளைச்சளை அறுவடை செய்வதில் திண்டாட்டம்.

(திருக்கோவில் தம்பி) மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மீண்டும் அடைமழை பாட்டம் பாட்டமாக தொடர்ந்து பெய்ந்து கொண்டிருக்கின்றது. துற்போது ப...


(திருக்கோவில் தம்பி)
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் மீண்டும் அடைமழை பாட்டம் பாட்டமாக தொடர்ந்து பெய்ந்து கொண்டிருக்கின்றது. துற்போது பெய்ந்து கொண்டிருக்கும் இந்த தொடர் அடைமழை காரணமாக முன்பு வெள்ள நீர் காணப்படாத பகுதிகளிலும் வெள்ளம் நிரம்பி காணப்படுகிறது.
இம்மாவட்டங்களில் பெரும் போக நெல் மற்றும் மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளின் அறுவடைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இந்த அடைமழை காரணமாக விவசாயிகள் தமது உற்பத்திகளை அறுவடை செய்வதில் சிரமப்படுவதை வயல் பிரதேசங்களில் காணக் கூடியதாக உள்ளது.
இப்பெரும் போகத்தின் ஆரம்பத்தில் விதைகளை நிலத்தில் பயிரிடும் போது Nhபதிய மழை நீர் இன்மையினால் குளங்களில் போதிய நீர் காணப்படாமையினால் நீர்பாசனம் இன்றி சில பகுதிகளில் வயல்கள் மற்றும் மேட்டு நிலப்பயிர்கள் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டிருந்தன. பின்னர் பெய்த மழையினால் ஓரளவு வளர்ச்சி கண்ட பயிர்கள்  தற்போது அறுவடை செய்யும் இத்தருணத்தில் மீண்டும் அடைமழை பெய்வதால் விளைந்த பயிர்கள்களை அறுவடை செய்வதில் சிரமப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
இந்த அடைமழை காரணமாக இம்முறை தாம் பெரும் போக பயிர்ச் செய்கையில் எதிர்பார்த்தளவு விளைச்சல்களை பெறமுடியாத துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுவதாகவும் அடுத்த போகத்தை எவ்வாறு முவலிடு இல்லாமல் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வது போன்ற வினாக்களோடும் ஏக்கத்தோடும் தமது கருத்துக்களையும் ஆதங்கங்களையும் விவசாயிகள் மேலும் தெரிவித்தனர்