(திருக்கோவில் தம்பி) தமிழர் பண்டிகையாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாநிதி எம் கோபா...
(திருக்கோவில் தம்பி)
தமிழர் பண்டிகையாம் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் கலாநிதி எம் கோபாலரெத்தினம் அவர்களின் தலைமையில் மிக விமர்சியான முறையில் தைப்பொங்கல் பெருவிழா 16.01.2013 புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதன் போது பிரதேச செயலாளர் அவர்கள் பொங்கல் பாணைக்கு அரிசி இட்டு பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக பிரிவுத் தலைவர்கள் மற்றும் பட்டதாரி உத்தியோகத்தர்கள் ஆகியோர் அரிசி இட்டுவதையும் திலகராஐ; சர்மா அவர்கள் பூசை வழிபாடுகளை நடத்துவதையும் பிரதேச செயலாளர் கலாநிதி எம் கோபாலரெத்தினம் உதவி திட்ட பணிப்பாளர் வீ.நவிரதன் கணக்காளர் கே. கேசவன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொது மக்கள் வழிபாட்டில் ஈடுபடுவதையும் படங்களில் காணலாம்.