Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

விழித்தெழுங்கள் விடை கிடைக்கும்.

திருக்கோவில் முருகன் கோவில்  மகாசபைக்கூட்டம்  மேற்படி மகாசபை கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி  நடைபெற உள்ளதாக அறிய முடிகிறது.கடந்த   காலங்கள...

திருக்கோவில் முருகன் கோவில்  மகாசபைக்கூட்டம் 
மேற்படி மகாசபை கூட்டம் எதிர்வரும் 20ம் திகதி  நடைபெற உள்ளதாக
அறிய முடிகிறது.கடந்த   காலங்களில் இருந்த கோவிலின் நிர்வாகம்
சரியாக இயங்கவில்லை,"கணக்குவழக்குகளை " சரியாக ஒப்புவிக்கவில்லை
எல்லாம் ஒரு "குத்துமதிப்பாகவே" சொல்லப்பட்டது இதை எதிர்த்து கேட்ட
இளையோரை அவர்கள் உதாசீனம் செய்தார்கள் என்றும், நிர்வாகத்தில் பல
"தில்லுமுல்லுகள்" நடந்ததாகவும்,"கையாடல்கள்" இருந்ததாகவும் திருக்கோவில்
பிரதேச மக்கள் (தம்பட்டை,தம்பிலுவில்,திருக்கோவில் விநாயகபுரம்,தங்கவேலாயுதபுரம்,தாண்டியடி)
சந்தேகப்படுகிறார்கள் என்றும் முன்னாள் நிர்வாகத்தினர் இந்த மக்களிடம் நம்பகத்தன்மையை
இழந்துவிட்டார்கள் என்றும் சொல்லப்பட்டது.இதையெல்லாம் புலத்தில் வாழும் ஊரவர்
அறிந்து அதிருப்தி அடைந்தார்கள் என்று நான் முன்னர் ஒரு கட்டுரையில் எழுதி உள்ளேன்.

அதைவிடுத்து தனிப்பட்ட முறையிலும் எனக்கு கேள்வி இருந்தது.2004ல் ஏற்பட்ட ஆழிப்பேரலை
அனர்த்தத்தின்போது கோவிலுக்கு சொந்தமான வாகனங்கள் (குதிரை,மயில்,சூரன்)திருத்த வேலைக்காக
நான், நமது ஊரவர் ஒருவருடன் சேர்ந்து ரூபாய் ஐம்பதாயிரம் திருக்கோவில் திருஞானவாணி மன்றம்
மூலம் அனுப்பி இருந்தேன்.அதற்க்குரிய சகல அத்தாட்சிகளும் என்னுடன் உள்ளது.(அவர்களின் கடிதம் உட்பட )
ஆனால் கடந்த வரவு செலவு அறிக்கையில் இந்த வாகனங்கள் கோவில் கணக்கால் செய்யப்பட்டது என்று
சொல்லப்பட்டது.இதை மறுத்து நான் எமது இணைய தளத்தில் எழுதினேன்,ஆனால் ஒரு பதிலும் அவர்களால்
தரப்படவில்லை.நடக்க விருக்கும் மகாசபை கூட்டத்தில் இளையோர் இதுபற்றி கேள்வி எழுப்ப வேண்டும்.

"கோவில்சொத்தை தொட்டவர்கள் ஒருபோதும் விளங்கமாட்டார்கள்" என்று சொல்லுவார்கள்.இது
எவ்வளவிற்கு உண்மை என்று தெரியாது.ஆனால் "தெய்வம் நின்று கொல்லும்" என்பது உண்மை.
ஆக,தற்போதைய நிர்வாகத்தினர் நல்ல முறையில் நம்பகமாக இயங்கவேண்டும்.செயல்பட
வேண்டும்.மக்கள் மத்தியில் முன்பிருந்தவர்கள் இழந்திருந்த நம்பிக்கையீன்மையை போக்கவேண்டும்.
அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும்,கணக்குகளுக்கும் தக்க பதில் சொல்லவேண்டும். மற்றும்
அரைகுறையில் அனாதையாக அம்போ என்று கிடக்கின்ற இராஜ கோபுரம் என்னவாகப்போகிறது.
அப்படியே இருக்கப்போகிறதா? அல்லது கட்டுமான வேலைகள் தொடங்க என்ன வழி ,திட்டங்கள்
நிர்வாகத்தினரிடம் இருக்கிறது போன்ற கேள்விகளுக்கு அவர்கள் பதில் தரவேண்டும். இல்லாமல்
கண்துடைப்புக்காக மடக்கல் பதில்களும், குத்துமதிப்புக் கணக்குகளும் முன்வைத்தால் பிரதேச மக்கள்
கிளர்ந்து எழுவதை தவிர்க்கமுடியாது போகும்.
ஊரில் உள்ள அனைத்து இளையோர் அமைப்புகளும்,சமூக நலன் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுசேர்ந்து
மக்கள் ஆதரவுடன் இம்முறை நடக்க விருக்கும் மகாசபைக் கூட்டத்தில் பல கேள்விகளை
கேட்டு பல பிரச்சினைகளுக்கு பதில் பெறவேண்டும் என்று புலத்தில் வாழும் மக்கள் கோரிக்கை
வைக்கிறார்கள். இளையோர்களே விழித்தெழுங்கள் விடை கிடைக்கும்.