Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

நன்றியுடன் கூடிய பாராட்டுகள்....

நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற பத்தினி தெய்வம் தம்பிலுவில் கண்ணகி அம்மனின் வைகாசி குளுர்த்தி சடங்கின் நிகழ்வுகளையும், அம்மனின் திருவிழா...

நடை பெற்றுக்கொண்டிருக்கின்ற பத்தினி தெய்வம் தம்பிலுவில்
கண்ணகி அம்மனின் வைகாசி குளுர்த்தி சடங்கின் நிகழ்வுகளையும்,
அம்மனின் திருவிழா ஊர்வலத்தையும், அன்னதானதர்மத்தையும்
புலத்தில் உள்ள எம்மவர்க்கு உடனுக்குடன் நேர் அஞ்சல் செய்துகொண்டும்,
செய்திகள் வெளியிட்டுக்கொண்டும் இருக்கின்ற  எமது இணையத்தள படப்பிடிப்பாளர்கள்,
செய்தியாளர்கள், மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் புலம்பெயர்ந்து 
வாழும் நம் ஊரவர், தங்கள் நன்றிகளையும், பாராட்டுகளையும்  இந்த வேளையில்
தெரிவித்துக்கொள்கிறார்கள். உங்கள் பணி தொடரட்டும். அம்மன் அருள் கிடைக்கட்டும்.
 
உங்களுக்காக எமது பாடல் ஒன்று..
-----------------------------------------------------------------------
அம்மன் கோவில் கதவுதிறந்து.....
சடங்கை நடத்துவோம் ....
அனைவருமே அம்மனவள்
அருளை நாடுவோம்......
கற்பு தெய்வம் கண்ணகிக்கு குளுர்த்தி பாடுவோம்
காவல் காக்கும் அம்மாளுக்கு நன்றி கூறுவோம்....
தாயே..அருள் தருவாய்....
தம்பிலுவில் கண்ணகியே......
 
காட்டில் உன்னை கண்டவர்கள் ஒரு குடியானார்...
கொட்டில்போட்டு காத்தவர்கள் மறு குடியானார்...
எட்டுப்பட்டி தமிழரெல்லாம் உன் குலம் தாயே...
பட்டினியே வந்திடாமல் காத்திடுதாயே...பசி
பட்டினியே வந்திடாமல் காத்திடுதாயே.....
 
நோய்நொடிகள் நீங்கவேண்டும் பத்தினியம்மா.....
தாய்மடியில் துயிலவேண்டும் கண்ணகியம்மா...
செய்யும் தொழில் யாவும் இங்கே சிறந்திடவேண்டும்....
சொந்தமண்ணில் சுதந்திரமாய் வாழ்ந்திடவேண்டும்...நாம்
சொந்தமண்ணில் சுதந்திரமாய் வாழ்ந்திடவேண்டும்.....
==========================================================================
பாடல். இரா. தெய்வராஜன்
பாடியோர். கோவிலூர் செல்வராஜன்
                        இரா. தெய்வராஜன்