Page Nav

HIDE

Post/Page

Weather Location

Latest:

latest

கல்வி மேம்பாடு கவனத்துக்குரியது...

கடந்த 26.03.2012 அன்று  க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி இருந்தன. எமது பகுதிக்குரிய பாடசாலைகளின் பெறுபேறுகளும் நமது தளத்தில் பார...

கடந்த 26.03.2012 அன்று  க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி
இருந்தன. எமது பகுதிக்குரிய பாடசாலைகளின் பெறுபேறுகளும் நமது தளத்தில்
பார்க்கமுடிந்தது. இதன்படி தம்பிலுவில் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து
செல்வன் சுப்ரமணியம். தனீஸ் அனைத்து பாடங்களிலும் அதிவிசேட சித்திகள்
பெற்றிருந்தார், அடுத்தபடியாக செல்வன் தட்சணாமூர்த்தி.மோகன்லால் எட்டு
பாடங்களில் அதிவிசேட சித்திகளும், ஒரு பாடத்தில் விசேட சித்தியும் பெற்றிருந்தார்.

மற்றும் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றிய செல்வி மனோகரன்.துஷாலினி
ஏழு பாடங்களில் அதிவிசேட சித்திகளும் இரண்டு பாடங்களில் விசேட சித்திகளும் பெற்றிருந்தார். மற்றும் திருக்கோவில் மெ.மி. பாடசாலையில்
இருந்து செல்வன் கந்தசாமி.அனோச்சன் ஆறு அதிவிசேட சித்திகளும், இரண்டு
விசேட சித்திகளும், ஒரு திறமை சித்தியும் பெற்றிருந்தார். இவர்களுக்கு
புலத்தில் வாழும் எம் ஊர்களை  சேர்ந்த அனைவரும் பாராட்டுகளையும்,
வாழ்த்துகளையும் தெரிவிக்கின்றார்கள். மற்றும் நல்ல முறையில் சித்தியடைந்த ஏனையோருக்கும் வாழ்த்துகள்.
அதேநேரம் ஏனைய கல்விமாவட்டங்களின் பெறுபேறுகளுடன் ஒப்பிடும்போது எமது பாடசாலைகளின் பெறுபேறுகள் அவ்வளவு திருப்தி
அளிப்பதாக இல்லை  என்ற ஓர் ஆதங்கமும் புலத்தில் பரவலாக காணப்படுகிறது. நவீன கல்வி போதனாமுறைகளும், பிரத்தியேக கவனத்துடன் கூடிய விசேட வகுப்புகளும், கணணி உட்பட தகவல் தொழில்
நுட்பம் பாட நெறிகளும் இப்பொழுது நாடுமுழுவதும் நடைமுறையில்
இருக்கிறதல்லவா? அப்படியிருந்தும் எமது பாடசாலைகள் பெரிய அளவில்
நல்ல பெறுபேறுகளை எடுக்கவில்லையே என்ற கேள்வியும் எழுகிறது.

ஒருவேளை மேற்குறிப்பிட்ட வசதி வாய்ப்புகள் இன்னும் எங்கள் பகுதிக்கு
கிடைக்கவில்லையோ என்றும் எண்ணத்தோன்றுகிறது. எமது பிரதேச மாணவ, மாணவிகளை ஊக்கிவிக்கும் முகமாக பல முன்னெடுப்புகளை
நாம் எடுக்கவேண்டிய அவசியத்தில் உள்ளோம் என்று பலர் பேசுவதை
கேட்கமுடிகிறது. இதுபற்றி எமது ஊரின் மூத்த கல்வியாளரும், கலைஞருமான திரு. எஸ்.பி. கனகசபாபதி அவர்கள் எமது பாடசாலைகளில்
கல்விபயிலும் மாணவமாணவிகளுக்கு உற்சாகத்தை கொடுக்க  DOTTS என்ற
(development organization of  thirukkovil thampiluvil suburb) அமைப்பின்மூலம் கல்விக்காக
பல நலன்கள் தரும் அல்லது உதவிகள் செய்யும் திட்டத்தை செய்யவேண்டும் அதற்கு புலத்தில் உள்ள எமது மண்ணின் மைந்தர்கள் நல்ல ஒத்துழைப்பு தரவேண்டும் என்று நீண்ட காலமாக சொல்லிவருகின்றார். இது இப்பொழுது மிக அவசியம் என்றே எண்ணத்தோன்றுகிறது. வெகுவிரைவில் இந்த DOTTS அமைப்பை உரிய
முறையில் செயல்படுத்தவேண்டும் என்று எமது இணையத்தளமும் விரும்புகிறது. இதுபற்றி அவர் ஏற்கனவே இணையத்தள பொறுப்பாளர்களுடன் பேசியிருக்கிறார்.  எமது பாடசாலை மாணவர்களுக்கு
நல்ல கல்வி வசதிகள், உயர்கல்வி படிப்பதற்கு உதவிகள் இந்த DOTTS மூலம்
கண்டிப்பாக கிடைக்க வழி செய்யமுடியும்.

ஆக எதிர்காலங்களில் எமது மாணவ, மாணவிகளுக்கு நல்ல பெறுபேறுகள்
கிடைப்பதற்கு நாம் எல்லோரும் உதவவேண்டும், இதற்க்குரிய செயல்பாடுகளை ஆசிரியர்களிடமும் இருந்து பெற்று அவர்களுக்கு என்ன
தேவையோ அதை செய்துகொடுக்க நாம் முன்வரவேண்டும் என்றும் இக்
கட்டுரைவாயிலாக கேட்டுக்கொண்டு மீண்டும் ஒருமுறை சித்தியடைந்த
மாணவ, மாணவிகளை பாராட்டி கொள்கின்றோம்.