Saturday, May 18, 2013

உற்சவத்தினை முன்னிட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தில் சிரமதானம்


(எஸ்.தீபன்)  தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி உற்சவத்தினை முன்னிட்டு ஆலய வளாகத்தினை தம்பிலுவில் -02மேற்கு பிரிவு பொதுமக்களும்,கிராம அலுவலகரும்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் மற்றும் பொதுசுகாதாரஉத்தியோகத்தரும் இணைந்து 2013-05-17 வெள்ளிக்கிழமை சிரமதானம் மூலம் ஆலய வளாகத்தினை துப்பரவு செய்தனர்.



















Read more

Thursday, May 16, 2013

சமுர்த்தி சமூகஅபிவிருத்தி பிரிவினால் கூரைத்தகடு வழங்கி வைப்பு

(ரவி குருகுலம்) திருக்கோவில் சமுர்த்தி சமூக அபிவிருத்திப்பிரிவினால் திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டு கழத்திற்கு ஒரு தொகுதி கூரைத்தகடு வழங்கும் வைபவம்2013.05.15ம்திகதி உதயசூரியன் விளைiயாட்டு மைதானத்தில் திருக்கோவில் பிரதேசசெயலாளர் கலாநிதி மூ.கோபாலரெத்தினம் அவர்கள் வழங்கிவைப்பதையும்கழகத்தின் உபதலைவர் அதனைப்பெறுவதையும்,சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் திரு.வி.அரசரெத்தினம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களனான கே.சுதாகரன்,ச.சிவகுமார் மற்றும் கழக உறுப்பினர்களையும் காணலாம்

Read more

மீள்குடியேற்றஅபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல்

மீள்குடியேற்ற அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படவுள்ள பொதுக்கிணறு,மலசலகூடம் அமைத்தல் சம்பந்தமான கலந்துரையாடல் திருக்கோவில் பிரதேசசெயலக உதவித்திட்மிடல் பணிப்பாளர் திரு.வி.நவிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் தங்கவேலாயுதபுரம்,கஞ்சிகுடியாறு கிராமசேவையாளர் பிரிவு பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் பைவத்தில் நிர்வாகஉத்தியோகத்தர் (பு.N.) திரு.கண.இராஜரெத்தினம் கிராமசேவையாளர்களான திரு.வீ.வீரரமணி, திரு.அ.மனோகரன், கஞ்சிகுடியாறு ராணுவப்பொறுப்பதிகாரி, பட்டதாரி உத்தியோகத்தர்களான ;.என்.ரமேஸ்,திரு.ஜனா அவர்களும் கலந்துகொண்டதை காணலாம


Read more

Friday, May 10, 2013

மரண அறிவித்தல் - கந்தப்பன் சித்திரவேல்

தம்பிலுவிலை சேர்ந்த கந்தப்பன் சித்திரவேல்  அவர்கள் 2013.05.09 (வியாழக்கிழமை ) நேற்று காலமானார் .
அன்னாரின் இறுதி கிரியைகள் இன்று மாலை இடம்பெறும் .

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள்  அனைவரும்    ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
- குடும்பத்தினர்

வீ.சி றோட், தம்பிலுவில் 01

Read more

Thursday, May 09, 2013

Video - ஊரில் இடம்பெற்ற விளையாட்டு போட்டி நிகழ்வின் காணொளி


(Video - R.Sayan )
சித்திரை புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகள் அண்மையில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது இதன் வீடியோவின் ஒரு பகுதியை இங்கே இணைத்துள்ளோம் இதன் இரண்டாவது பகுதி நாளை பதிவேற்றப்படும்
Read more

Saturday, May 04, 2013

மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

(திருக்கோவில் நிருபர் சு.கார்த்திகேசு )
திருக்கோவில் கல்வி வலயத்தினால் இவ்வாண்டு புதிதாக ஆரம்பித்து வைக்கப்பட்ட  மண்டாணை திகோ/ மண்டாணை தமிழ் கலவன் பாடசாலைக்கு இளையதம்பி சிநேந்திரன் (அதிபர்) அவரிகளின் ஞாபகார்த்தமாக அவரது புதல்வரும் வைத்தியருமான எஸ். பாஸ்கரநாதன் அவர்களினால் மண்டாணை தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் 26 பேருக்கு  கற்றல், கற்பித்தல் உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
Read more

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு



இலங்கை இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு  (04.05.2013) ஆம் திகதி இலங்கை முழுவதுமாக இடம்பெற்றது.இதன் போது திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் வேட்பாளர்கள் வாக்களிப்பதையும் பிரதேச செயலாளர் எம்.கோபாலரெத்தினம் மற்றும் செயலக அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.படம்







Read more

Friday, May 03, 2013

க.பொ.த உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்

இம்முறை கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. உயர்தர பரீட்சையை ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பித்து 31 ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் W.M.N.J.புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.










Read more

Thursday, May 02, 2013

திருக்கோவிலில் தொழிலாளர் தினம் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில்

 (திருக்கோவில் பிரதேச செய்தியாளர் சு.கார்த்திகேசு)
சர்வதேச தொழிலாளர் தினம் இமமுறை முதன் முதலாக இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் திருக்கோவில் பிரதேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.இதன் போது மே தின ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளதால் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவேண்டும். மற்றும் ஆசிரியர்கள் சுகந்திரமாக இயங்க வவழிவிடுக! கல்வியில் சமவாய்ப்பை உறுதிப்படுத்துக!போன்ற காரணங்களை அடிப்படையாகக் கொண்டும் மேலும் ஆசிரியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படல் அவசியம்,இடமாற்றம் முறையாக சீராக்கப்படவேண்டும்,தேசிய மாகாண பாடசாலை ஏற்றத்தாழ்வு நீக்கப்படவேண்டும், மேலதிக ஆசிரியர் என்ற பகுதி உடனடியாக நீக்கப்படவேண்டும்,வருடமத்தி இடமாற்றம் ரத்துச் செய்யப்பட வேண்டும். திருக்கோவில் மட்டு.மேற்கு வலயங்களுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படவேண்டும்,கல்வி வலயங்களில் ஆசிரியர்களுக்கு நடமாடும் சேவை அவசியம், கஸ்டப் பிரதேச பாடசாலை ஆசிரியரை மையப்படுத்தியதாக அமைதலவசியம்,தொழிற் சங்க செயற்பாமுகளுக்கு ஆதரவு தேவை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தும்  சுலோப் பதாதைகளை தாங்கிச் சென்றிருந்தனர்.அத்துடன் மின் கட்டண உயர்வுக்கும் எதிராக ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஆசிர்யர்கள் சுலோகங்களை ஏந்தி சென்றனர்.இவ் மே தினக் கூட்டமானது இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் திருக்கோவில் வலய செயலாளர் பா. சுந்திரேஸ்வரன் (அதிபர்) அவர்களின் தலைமையில் தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான வி.டி சகாதேவராஐh அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்ததுடன் மட்டக்களப்பு, அமபாறை ஆகிய பாடசாலைச் சேர்ந்த ஆசிரியர்கள் அதிபர்கள் வலயக் கல்வி அலுவலக பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு ஆக்க பூர்வமான கருத்துக்களை முன்வைத்து தமது உரைகளை ஆற்றியிருந்தனர்.இதன்போது கல்வித்துறையில் சிறப்பாக பணிபுரிந்த அதிபர் எஸ்.சுந்தரமூர்த்தி,ஆலையடிவேம்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் வி.குணாலன், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரும் சம்மாந்துறை கல்வி வலயத்தின் உதவிக் கல்விப் பணிப்பாளரும் ஊடகவியலாளருமான வி.டி சகாதேவராஐh ஆகியோருக்கு பொன்னாடைப் போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். 









Read more

இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல்

 (திருக்கோவில் நிருபர்)
இளைஞர் பாராளுமன்ற தேர்தலுக்கான மனுத்தாக்கல் செய்யும் இறுதி தினமான நேற்று (30.04.2013)ஆம் திகதி திருக்கோவில் பிரதேச செயலகத்தில் திருக்கோவில் பிரதேச செயலக அதிகாரிகளான நிர்வாக உத்தியோகத்தர் டி.எஸ்.றோஹன பிரேரா, நிர்வாக உத்தியோகத்தர்(கி.சே) கண.இராஐரெத்தினம்,சமூர்த்தி தலைமை முகாமையாளர் வி.அரசரெத்தினம்,இளைஞர் சேவைகள் அதிகாரி எம்.எச்.எம்.பாறூக் ஆகியோர் முன்னிலையில் இரு இளைஞர் கழகங்கள் தேர்தல் மனுத்தாக்கல் செய்வதை படத்தில் காணலாம் (படம் திருக்கோவில் நிருபர்) 




Read more

Tuesday, April 23, 2013

ஆட்டோ,பஸ் மோதி விபத்து மூவர் திருக்கோவில் வைத்தியசாலையில் !


 (திருக்கோவில் தம்பி)
  திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட காஞ்சிரன்குடா  சந்தியில் நேற்று மாலை 7.00 மணியளவில் இலங்கை போக்கு வரத்துக்குச் சொந்தமான  பஸ்ஸீம் ஆட்டோவும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் ஆட்டோவில் பயணித்த மூவருமே காயமடைந்த நிலையில் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.பொத்துவில் பகுதியில் இருந்து வந்த ஆட்டோ வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் பஸ்ஸீடன் மோதியதாக பொலிசாரின் ஆரம்பக் கட்ட விசாரணைகள் மூலம் தெரியவருகிறது.இவ்விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

Read more